விக்கிக்கு மீண்டும் திருமணத்தை நடத்துவோம் - வேதனையுடன் உண்மை விளக்கிய பெரியப்பா பெரியம்மா!
நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நயன் விக்கி திருமணம் நேற்று ஜூன் 9ம் தேதியில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது.
பல திரை பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் 27 வகையான விருந்து, ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண சாப்பாடு என தடபுடலாக நடந்தது.
வேதனையில் பெரியம்மா
இந்நிலையில், தன்னை திருமணத்திற்கு கூப்பிடவில்லை என விக்னேஷ் சிவனின் பெரியம்மா அளித்த பரபரப்பு தகவல் தான் டிரெண்டாகி வருகிறது. அதில், அவர், நான் விக்னேஷ் சிவனின் பெரியம்மா. அவனது கல்யாணத்திற்கு கூப்பிடுவான் என ரொம்ப எதிர்பார்த்தோம்.
ஆனால் கடைசி வரை கூப்பிடவில்லை. மிக ஏமாற்றமாக உள்ளது. மேலும், அவனை குல தெய்வம் கோயிலுக்கு அழைத்து போக வேண்டும் என நினைத்திருந்தேன்.

ஆனால் அவர்கள் தனியாக வந்து குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். எந்த காரணத்தினால் எங்களை கூப்பிடவில்லை என தெரியவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொன்னார்கள் எனவும் தெரியவில்லை.
சிறுவயதில் விக்னேஷ் சிவன் எங்கள் வீட்டில் தான் வளர்ந்தான். லீவ் விட்டால் எங்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து விடுவார்கள். அவங்க அப்பா இருந்தவரை ஒவ்வொரு விடுமுறைக்கும் வருவார்கள். நாங்கள் அனைவரும் வெளியில் சென்று விட்டு வருவோம்.
ஆனால் இப்போது கல்யாணத்திற்கு கூப்பிடாதது வேதனையாக உள்ளது. நாங்கள் நினைப்பதை போல், அவனும் எங்களை நினைப்பான் என்று நம்புகிறேன் என வேதனையை காட்டியுள்ளார்.

மீண்டும் திருமணம்?
மேலும், அவரது பெரியப்பா தெரிவிக்கையில், விக்கி பெரியவர்களை அழைத்து, கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 9 -10.30 AM திருமண நேரம் என்பது குளிகை நேரம் குளிகை நேரத்தில் திருமணம் மற்றும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதிகம்.
எனவே, இந்த மாதிரி வீட்டில் நடக்கும் முதல் திருமண நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தில் 11 பேர் வாரிசுகள் உள்ளனர்.
அவர்கள் யாரையும் கலந்து கொள்ளாமல் நடத்தப்படுவது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மன உளைச்சலையும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் விக்கி நயனின் திருமணம் மீண்டும் சொந்தங்களோடு கோயிலில் நடைபெறுமா? என இனி தான் தெரிய வரும்.