திருமணமான ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பிரச்சினை! நயன்தாரா விக்கி இரண்டாவது திருமணமா?
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
2-வது திருமணம்
இந்நிலையில், நயன்தாரா ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் ஜோதிடர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, முதலில் மரத்துடன் திருமணம் செய்து வைத்து விட்டு, அதன் பிறகுதான் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்தார் நயன்தாரா.
ஆனால், தற்போது விக்கியும், நயனும் 2வது முறையாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவனே நயன்தாரா கழுத்தில் 2வது முறையாக தாலி கட்டி தோஷம் தீர பரிகாரம் செய்ய இருப்பதாகவும், அத்திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த திருமண தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும், இவர்கள் இருவரும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் வாழ்வதற்கான பரிகாரம் தான் இந்த 2வது கல்யாணம் என்று அறிந்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.