நல்லகண்ணு உடலுக்கு தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 24 நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார், பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த நல்லகண்ணு ஐயாவின் உடல் தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலை 3 மணிக்கு அரசு மரியாதையுடன் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கே இவரது உடல் தானமாக கொடுக்கப்பட உள்ளது.
நேற்று இரவு தவெக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, நாசர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |