இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் பேச்சில் கில்லாடிகளாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசியை போன்றே பிறப்பு நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, கல்வி, திருமணம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பேசியே காரியத்தை சாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களின் பேச்சுக்கு மயங்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி பேச்சாற்றலை கொண்டே எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள் பெரும்பாலும் எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிருகசீரிஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஆழமான சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாயில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும்.சரியான விடயங்களை மட்டுமே பேச வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.
இவர் நினைத்த விடயத்தை மற்றவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளும் வகையில் பேசுவதால், இவர்கள் நினைத்ததை பேசியே சாதித்துவிடுவார்கள். இவர்களின் வெற்றியில் பேச்சாற்றல் முக்கிய பங்கு வகிக்கும்.
ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால், பிறப்பிலேயே மற்றவர்களை வசீகரிக்கும் வகையிலும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசும் திறனைக் கொண்டுடிருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுடன் முதல் தடவை பேசும் போதே நீண்ட நாட்கள் நெருங்கி பழகிய உணர்வை ஏற்படுத்துவார்கள். இந்த ஆற்றல் இவர்களின் வெற்றிக்கு காரணமாகின்றது. இவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்தால் அதனை யாராலும் மறுக்கவே முடியாது.
இவர்கள் எவ்வளவு கடுமையான விஷயத்தையும் கூட மென்மையாக வெளிப்படுத்துவதில் கில்லாடிகளாக இருப்பதால், இவர்களின் பேச்சு அனைவரையும் வெகுவாக ஈர்க்கும்.
சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காற்றின் கடவுளான வாயு பகவானால் ஆளப்படுகின்றார்கள். இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் பேச்சாற்றல் இருக்கும்.
இவர்கள் சொல்லும் விடயங்களை மற்றவர்கள் மறுக்க முடியாத வகையில் வெளிப்படுத்துவதில் இவர்கள் தான் வல்லவர்கள்.
இவர்களின் பேச்சு வேகமானதாகவும், தர்க்கரீதியானது அதேசமயம் மிகவும் தெளிவானதாகவும் இருப்பதால், இவர்களால் எந்த கடினமான சூழ்நிலையையும் பேசியே சமாளித்துவிட முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |