கொழுப்பு உருகி...எடை குறைய - காலையில் வெறும் வயிற்றில் இதை குடிங்க
ஆரோக்கியமான முறையில் எடை இழக்க விரும்பினால் அதற்கு மிகவும் எளிய முறை வைத்தியம் ஒன்று உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை இழப்பிற்கு இலவங்க பட்டை நீர்
பெரும்பாலான வீடுகளில் இலவங்கப்பட்டை சமையலில் பயன்படுத்தப்படும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில், இலவங்கப்பட்டை ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என கூறப்படுகின்றது.
ஆயுர்வேத மருத்துவர் சஞ்சல் சர்மாவின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது எடை இழப்புக்கு நன்மை கொடுக்கும் என்று கூறி உள்ளார்.
இந்த இலவங்கப்டை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உங்கள் உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. எனவே இதை பற்றி வரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது - இலவங்கப்பட்டையில் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் உள்ளன.
நமது உடலில் வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும்போது, உடல் கலோரிகளை வேகமாக எரித்து, எடை இழப்பை எளிதாக்குகிறது. இதற்கு பக்க பலமாக இருப்பது இலவங்க பட்டை நீர் எனப்படுகின்றது.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு - இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சீரான முறையில் பராமரிக்க உதவும். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போது நமக்கு பொய் பசி வராது. இதனால் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தொப்பையைக் குறைக்கும் - இலவங்கப்பட்டை தண்ணீர் உடலில், குறிப்பாக தொப்பையைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
இது செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது, இதனால் வயிறு தடடை போல மாறும்.
இயற்கை டீடாக்ஸ் பானம் - இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. உடல் உள்ளே சுத்தமாக இருக்கும்போது, எடை இழப்பு சிறப்பாக செயல்பட்டு சருமம் பளபளப்பாக இருக்கும்.

எப்படி செய்வது, எப்போது குடிக்க வேண்டும்?
ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
5–7 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு படுக்கைக்கு முன் இதை உட்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு உடலில் ஏதும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை நாடி ஆலோசனை கேட்டபின் இந்த முயற்ச்சியை நீங்கள் எடுக்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |