திருமணம் முடிந்ததும் தாறுமாறாக உயர்ந்த நயன் சம்பளம்! இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
நடிகை நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் கோலாகலமாக திருமணம் செய்தார்.
இவர்களின் திருமண பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டே வருகின்றது. இவர்களின் திருமணத்தை ஒளிபரப்ப நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளதாகவும், இருவரும் சற்று கலக்கத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தினை உயர்த்தினாரா நயன்தாரா?
நயன்தாரா நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகுவதால் அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், தற்போது இவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடிக்கும் நயன்தாரா இப்படத்திற்கு ரூ. 7கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கதாநாயகியை மையப்படுத்தி தமிழில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கும் நயன்தாரா, ரூ. 10 கோடி வரை சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டதாகவும், இதனை அளிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் முடித்தாலும் தொடர்ந்து தனக்கேற்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நயன்தாரா.
