துளியும் மேக்கப் இல்லாமல் கவர்ச்சி நடிகையுடன் நயன்தாரா! வெளியான புகைப்படம்
திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக உள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜோடியாக வெளியே சென்றுள்ளனர்.
மும்பையில் நயன்தாரா விக்கி
நடிகை நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் மும்பையில் முகாமிட்டுள்ள நயன்தாரா, அங்கு நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
அதேபோல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் மும்பையில் இருந்தபடியே தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக உள்ள விக்கி - நயன் ஜோடி, நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜோடியாக வெளியே சென்றுள்ளனர்.

கவர்ச்சி நடிகையுடன் நட்சத்திர ஜோடி
அப்போது பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவை நேரில் சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த போட்டோ இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.
நடிகை மலைகா அரோராவுக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் (37) கபூரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தற்போது லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
