ஹனிமூன் செல்லும் போது நயன்தாராவுடன் சென்ற மற்றொரு நபர்! வெளியான உண்மை: அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை நயன்தாராவின் ஹனிமூன் செலவையும் பிரபல ஒளிபரப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடி இந்தியா திரும்பின அவர்கள், தங்களது வேலையை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனிற்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ஸ்பெயினில் இரண்டாவது ஹனிமூன்
இந்த நிலையில் திருமணத்தை அடுத்து தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு தேனிலவு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியின் முழு செலவையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் திருமணம் போலவே தேனிலவுக்கும் நயன் - விக்கி தம்பதிக்கு ஒரு பைசா செலவில்லை என கூறப்படுகிறது.
மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் போட்டோகிராபர் ஒருவரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் சென்றுள்ளதாகவும் அவர் தான் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாராவின் திருமண வீடியோவில் தேனிலவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



