முகத்தோடு முகம் வைத்து பயங்கர ரொமான்ஸ்! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா
நடிகை நயன்தாராவின் ஹனிமூன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
திருமணம்
நடிகை நயன்தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி கரம்பிடித்தார்.
மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் நயன்தாரா.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வந்துள்ள நிலையில் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றனர்.
திருப்பதி சென்ற ஜோடி
திருமணம் முடிந்த நயன்தாரா மற்றும் விக்கி ஜோடிகள் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்பு அங்கு சர்ச்சையில் சிக்கிய நிலையில், விக்னேஷ் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
குறித்த புதுமண ஜோடி கேரளாவிற்கு மறுவீட்டிற்கு சென்று அங்கிருந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
தாய்லாந்து சென்ற ஜோடி
இந்நிலையில் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற நயன்தாரா தனது கணவர் விக்கியுடன் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் ஹனிமூன் கொண்டாடி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.