சூரியனின் ராசி மாற்றம்: டிசம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!
Sun Enters Sagittarius - 3 Zodiac Signs Set to Enjoy a Lucky Period : ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு கிரகமும் ஒருசில குறிப்பிட்ட அம்சங்களைக் குறிப்பது போல, சூரியன் தன்னம்பிக்கை, அதிகாரம், அங்கீகாரம், அந்தஸ்து மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறார்.
அந்த வகையில், சூரியனின் நட்சத்திர மற்றும் ராசி மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை.

அந்த வகையில், 2026ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். குருபகவானின் ஆளுகைக்கு உட்பட்ட தனுசு ராசியில் சூரியன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்குத் தொழில் ரீதியான முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் பணியிடத்தில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
குறிப்பாக, மூன்று ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் சிறப்பான பலன்களைத் கொடுக்கப்போகின்றது. அப்படி உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

சூரியன் தனுசு ராசிக்கு மாறுவதால், மேஷ ராசியினரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், சிலருக்குப் பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் அதிகரித்து, மேலதிகாரிகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். புதிய திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் உண்டு.
குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி

சூரியன் தனுசு ராசிக்கு மாறுவது கன்னி ராசியினருக்குப் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். வேலை மற்றும் தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் பெயரும் புகழும் அதிகரிப்பதுடன், ஆளுமைக்கும் மரியாதை கிடைக்கும். தன்னம்பிக்கையும் வசீகரமும் அதிகரிப்பதால், தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.
பணியிடத்தில் உங்கள் முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, ராகுவின் நட்சத்திர மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களையும் வெற்றிகளையும் கொண்டுவரும்.
விருச்சிகம்

சூரியன் தனுசு ராசிக்கு மாறுவதால், விருச்சிக ராசியினரின் நிதி மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் பேச்சுத்திறனும் ஆளுமையும் மற்றவர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதுடன், புதிய ஒப்பந்தங்கள் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டலாம். முதலீடுகள் மூலமாகவும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். வேலையில்லாதவர்களுக்குத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி நிலையில் எதிர்ப்பாராத வளர்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |