ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள்
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனிடையே இணையத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் விக்கி, தற்போது தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருவரும் ஜோடியாக ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தினந்தோறும் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில், படு மார்டனாக நயன்தாரா வெள்ளை ஷர்ட் மற்றும் ப்ளு ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற ஷூ அணிந்து செம்ம கிளாஸாக இருக்கிறார்.
மேலும், இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக அவள் என்னை போட்டோ எடுத்த போது நான் அவளைக் கிளிக் செய்தேன் என பதிவிட்டுள்ளார்.