திரையுலகில் இருந்து கொண்டே பல நிறுவனங்களுக்கு சொந்தகாரியான பிரபலம்! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது புதிய தொழிலை துவங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவலொன்று வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை தான் நயன்தாரா. இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பெயரும் இருக்கின்றது.
கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு அழகிய குழந்தைகள் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றது. இதனால் புதிது புதிதாக பல வியாபாரங்களை துவங்கி வருகின்றார்.
பல வியாபாரங்களுக்கு சொந்தமாகும் நயன்தாரா
அதில், முதலாவது துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட புதிய தொழில் இதற்காக சுமார் ல் 50 கோடி முதலீடு செய்துள்ளாராம்.
இரண்டாவது, கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் தி லிப் பாம் கம்பெனி இதில் நயன்தாரா தான் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.
மூன்றாவது, இந்தியாவில் மிகப் பிரபலமான தேநீர் கடையான "சாய் வாலே" என்ற கடையிலும் முதலீடு செய்துள்ளாராம்.
நான்காவதாக வட சென்னை பகுதியிலுள்ள “அகஸ்தியா” திரையரங்கத்தை சொந்தமாக வாங்கி உள்ளார்.
இந்த திரையங்கை அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கமாக வடிவமைக்கவுள்ளரார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் நயன்தாரா சினிமாவை விட்டு சென்றாலும் அதற்கு மாறாக எப்படி சம்பாரிக்கலாம் என இது போன்ற வேளைகளை சினிமாவில் இருக்கும் போதே செய்து வருகின்றார்.