அழகுக்கு அழகு சேர்க்கும் ரோஸ் வாட்டர்...!
பெண்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களை விட அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
தனது முகம் பளபளப்பாகவும் எந்தவித கரும்புள்ளிகளோ, பருக்களோ இல்லாமல் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும்.
அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல அழகு சாதனப் பொருட்கள் நம்மிடையே வந்தாலும் ரோஸ் வோட்டருக்கு என்றுமே தனியிடம் உண்டு.
சரும கருமை நீங்க...
ஒரு பௌலில் ஒரு கரண்டி பயத்தம் மா, தேவையான அளவு ரோஸ் வோட்டர் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவாகக் காணப்படும்.
கருவளையம் மறைய...
ஒரு கொட்டன் துணியில் ரோஸ் வாட்டரை தொட்டு கருவளையம் உள்ள இடத்தில் வைத்து, 15 நிமிடங்களின் பின்னர் அகற்றிவிடவும்.
முகப்பருக்கள் மறைய...
ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள் எடுத்து, நன்றாகக் கலந்து, இரவு தூங்கும்போது முகத்திலுள்ள பருக்களின் மீது பூச வேண்டும். இதை மறுநாள் காலை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
பொலிவற்ற சருமத்துக்கு...
ரோஸ் வாட்டர் ஒரு கரண்டி எலுமிச்சை சாறு ஒரு கரண்டி எடுத்து இரண்டையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை உறங்குவதற்கு முன்னர் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவலாம்.