திருமண நாளில் நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்!
நேற்றைய தினம் திருமண நாளைக் கொண்டாடிய போது விக்கியின் சப்ரைஸால் நயனை அழவைத்திருக்கிறார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.
நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.
நயனை அழவைத்த விக்கி
இந்நிலையில் நயனும் விக்னேஷ் சிவனும் நேற்று தங்களது முதலாவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தனர்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டும் வீட்டிற்கு அழைத்து திருமண நாளைக் கொண்டிய வேளையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சப்ரைஸ்ஸாக ஒரு விடயம் செய்திருக்கிறார்.
அதில் விக்கியின் நண்பர் ஒருவர் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான பாடலை புல்லாங்குழலில் இசைத்து காட்ட அதை கேட்டு நயன்தாரா விக்கியின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டார்.
இந்த வீடியோ காட்சி தான் தற்போது அதிகம் வைரலாகி ட்ரண்டாகி வருகின்றது.