விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண நாளை கொண்டாடிய ஜோடி
விவாகரத்து செய்துக்கொள்ளப் போவதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் திருமண நாளை கொண்டாடியிருக்கிறார்கள் சினேகா- பிரசன்னா ஜோடி.
சினேகா- பிரசன்னா
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் என்னும் திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு பிரசன்னா அறிமுகமானார். 2000ஆம் ஆண்டில் விரும்புகிறேன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார் சினேகா.
இவர்கள் இருவரும் சினிமாவில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் 7 ஆண்டுகள் கழித்து தான் சினேகாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்தனர்.
இப்படப்பிடிப்பில் இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாகினர். நாளடைவில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மேல் காதல் மலர்ந்துள்ளது. அதன்பிறகு இருவரும் காத்திருந்து இருவர் வீட்டிலும் சம்மதம் வாங்கி திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களுக்கு விஹான் மகனும் ஆதியன்தா மகளும் இருக்கிறார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் சினேகா-பிரசன்னா ஜோடியும் விவாகரத்து செய்துகொள்ளப்போகிறார்கள் என பல காரணங்களுடன் பல செய்திகள் வெளியாகி இருந்தது.
ஆனாலும் இந்த ஜோடிகள் விவாகரத்து பற்றி எதுவும் பேசிக்கொள்ளாத நிலையில் தற்போது காதல் சொட்ட சொட்ட கடிதம் எழுதி எல்லாவற்றிக்கும் முற்றப்புள்ளி வைத்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் தங்களது 11ஆவது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த தினத்தை முன்னிட்டு நடிகர் பிரசன்னா தனது காதல் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் ஏய் போண்டாட்டி…. ‘இந்த சிறப்பு நாளில், நான் சொல்ல விரும்புகிறேன், வாழ்க்கையின் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களில் உங்கள் கையைப் பிடித்துக் கொள்வது, நாம் என்ன செய்தாலும் நான் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டிருக்கிறார்.