நயன்தாராவின் திருமண வீடியோ எப்போது வெளியாகிறது? லீக்கான தகவல்
நடிகை நயன்தாரா மற்றும் விக்கி திருமண வீடியோ குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலரான விக்கியை கடந்த மாதம் கரம்பிடித்தார்.
இவர்களது திருமணம் பல்வேறு கட்டுப்பாடுகள் உடனும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற நிலையில், பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் காணொளி, புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இவர்களது திருமண நிகழ்வை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி இருந்ததாகவும், திருமணத்திற்கான செலவுகளையும் குறித்த நிறுவனமே செலவு செய்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இவர்களுக்கு திருமணமாகி 50 நாட்கள் ஆகவுள்ள நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சில புகைப்படங்களை வெளியிட்டதால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியானது.

திருமண காணொளி எப்போது வெளிவரும்?
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் விக்கி நயன் ஜோடியின் போடோஷூட் ஒன்றை வெளியிட்டு வதந்திகளை தவிடுபொடி ஆக்கியது.
சமீபத்திய தகவல்படி அந்நிறுவனம் விக்கி - நயன் ஜோடியின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாம், இதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
குறிப்பாக இந்த திருமண வீடியோவை ஒரே தொகுப்பாக வெளியிடாமல், வெப் சீரிஸ் போல், மெஹந்தி நிகழ்வு தனியாகவும், சங்கீத் நிகழ்வு தனியாகவும், திருமண நிகழ்வு தனியாகவும், திருமணத்துக்கு பிந்தைய நிகழ்வு தனியாகவும் என தனித்தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இதற்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் விக்கி - நயனின் திருமண வீடியோ வெகு விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.
