வங்கி இருப்பு இரட்டிப்பாகும் யோகம்! குரு வக்ரத்தால் செல்வம் பெறப்போகும் 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவர்களின் குருவாகப் போற்றப்படுபவர் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக விளங்கும் இவர், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது குரு பகவான் அதிசாரப் பெயர்ச்சியாக அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார்.இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் சிம்ம ராசியிலேயே அவர் வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார்.

இந்த வக்ர நிலையில் குரு பகவான் சுமார் 122 நாட்கள் நீடிக்கவுள்ளார். அதன்பிறகு, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குவார்.
குரு பகவானின் இந்த வக்ரப் பயணம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் குறிப்பாக, நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்தக் காலகட்டம் எதிர்பாராத நற்பலன்களை வழங்கக்கூடும்.
அப்படி நிதி மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 4-ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, நிதி நிலைமை மேம்படும்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
துலாம்

துலாம் ராசியின் 11-ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக, நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறுவதுடன், பண வரவும் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக உழைத்து வந்ததற்கான பலனை இக்காலத்தில் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமையும் செயல்பாடுகளும் பாராட்டப்படும்.
மகரம்

மகர ராசியின் 8-ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், டிசம்பர் 13 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக வராமல் இருந்த பணமும் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
குடும்பச் சூழல் மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.புதிய தொழில் ஆரம்பவர்களுக்கு அல்லது புதிய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 7-ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும் யோகம் காணப்படுகின்றது.
புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி நிலவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |