தாயாக போகும் நயன்தாரா! திருமணம் முடிந்து விட்டதா? ஷாக்கில் ரசிகர்கள்...தீயாய் பரவும் தகவல்
கடந்த சில நாட்களாக நயன்தாரா திருமணம் குறித்த பேச்சு இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
அவரின் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது.
அதனால்தான் அவர் இவ்வளவு காலம் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாராம்.

இவருக்கு திருமணம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் நயன்தாராவை பற்றி வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அவருக்கு முப்பத்தி ஏழு வயது ஆகிவிட்டதாம். இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களும் இருக்கிறது.
அதனால்தான் அவர் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
இதிலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை.
நடிகை நயன்தாரா ரகசிய திருமணம்? அம்பலப்படுத்திய வீடியோ காட்சிகள்