ரோட்டுக்கடையில் செய்யும் முட்டைக் கலக்கி இனி வீட்டிலும் செய்யலாம்: எப்படி தெரியுமா?
முட்டையை வைத்து வித விதமான உணவுகளை செய்யலாம். அப்படி ரோட்டு கடைகளிலும், ஹோட்டல்களிலும் கிடைக்கும் உணவுகளின் சுவையும் ஒரு தனி ரகம் தான்.
அப்படி ரோட்டுக்கடைகளிலும் கிடைக்கும் ஆம்லேட் கலக்கிப் போல வீட்டிலும் செய்யலாம். ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
முட்டை -3
சிக்கன் அல்லது கறிகொழம்பு - 5 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
எடுத்துக் கொண்ட ஏதேனும் குழம்பை அதனுடன் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஊற்றி ஓரங்கள் லேசாக வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும்.
இப்படி வேக வைக்கும் போது நடுவில் கொஞ்சம் வேகாமல் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் ஹோட்டல் சுவையில் நன்றாக இருக்கும்.