வைட்டமின்களை அள்ளித்தரும் உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட் செய்வது எப்படி?
நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், சத்துக்கள், புரோட்டீன் என அனைத்துமே நிறைந்தது உருளைக்கிழங்கும், முட்டையும்.
இவை இரண்டையும் கொண்டு சத்தான ஆம்லேட் செய்தால் எப்படி இருக்கும்? இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் அன்றைய நாளுக்கான எனர்ஜி கிடைத்து விடும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -2
முட்டை மஞ்சள்கரு
வெங்காயம் -1
அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயம், எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் அரிசிமாவு, மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூளுடன் அரிசி மாவு சேர்த்துவிட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
தோசை கல்லினை சூடாக்கி, மிதமான தீயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஆம்லேட் போட்டால் சத்தான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லேட் தயாராகிவிடும்.
குழந்தைகளுக்கும் இதை செய்து கொடுக்கலாம், புரோட்டீன் நிறைந்த இந்த உணவு குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றே!!!