காரசாரமான மஷ்ரூம் சுக்கா ! தப்பி தவறி இந்த பொருளை மட்டும் சேர்த்துறாதீங்க..
பொதுவாக வீடுகளில் கறி மீன் சமைக்கிறார்கள் என்றால் அன்றைய தினம் சாப்பிடும் ஆர்வம் கூடி விடும்.
அந்தவகையில் மட்டன், சிக்கனை விட மிகவும் சுவையானது என்றால் அது மஷ்ரூம் தான்.
சாதத்தினை விட கறி மீன் குழம்புகள் நாண், சப்பாத்தி, தோசைக்கு இவையனைத்திற்கும் தான் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான ஸ்டைலில் மஷ்ரூம் சுக்கா செய்வது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தயாரிப்பு முறை
முதலில் மஷ்ரூமை எடுத்து அதனை நன்கு சுத்தமாக அலசிக் கொண்டு சிறுசிறு துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்த்து வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து மஷ்ரூமை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் வேக வைத்து கொள்ளவும்.
பின்னர் அதனை எடுத்து தண்ணீர் இல்லாத அளவிற்கு பிழிந்து கொள்ளவும். அதே கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய், சிறிய வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அதனை ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்க விடவும். பின்னர் பொடியை கலந்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.
வாசனை சென்றவுடன் மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி கொள்ளவும்.
10 - 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும் அப்போது எண்ணெய் பிரிந்து வரும். நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான மஷ்ரூம் சுக்கா தயார்!