சின்ன வெங்காயம் சாப்பிடுங்க... பெரிய நன்மைகள் பெற்றிடுங்கள்
உணவுக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள் என்றால், அது வெங்காயம். வெங்காயம் இல்லாவிட்டால் எந்தவொரு குழம்புமே நன்றாக இருக்காது.
பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றன.
சிலர் சோறுடன் சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்து சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு வெறும் பச்சையாக வெங்காயத்தை உண்ண விருப்பம் இருக்காது. காரணம், அதை வெறும் வாயில் உண்ணும்போது வாயிலிருந்து ஒரு வித மணம் வீசும். அது பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை.
சின்ன வெங்காயத்தில் புரதம் 1.1 கிராம், கார்போஹைட்ரேட் 9.3 கிராம், கொழுப்பு - 0.1 கிராம், நீர் 89%, சீனி 4.2 கிராம் என பல சத்துக்கள் காணப்படுகின்றன. அதையும் பச்சையாக உண்ணும்போது என்னென்ன நன்மைகள் உள்ளதென பார்க்கலாம்.
- சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்தசோகை குறையும்.
- நீர் கடுப்பு குணமாகும்.
- சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிடுவதால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.
- வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் கட்டிகெளுக்கு சின்ன வெங்காயத்தை நசுக்கி அந்த சாற்றை கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
- வெங்காயத்தில் கொஞ்சம் நெய் விட்டு வதக்கி உண்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.
- உடல் சூடு தணியும்.