அட்டகாசமான மஷ்ரூம் எக் ப்ரை: ஒரு சில நிமிடங்களில் தயார் செய்வது எப்படி?
சைவம் உண்பவர்களையும், அசைவம் உண்பவர்களையும் கவரும் லிஸ்ட்டில் மஷ்ரூமுக்கு தனி இடம் உண்டு.
மஷ்ரூம் சுக்கா, காளான் குழம்பு, காளான் மஞ்சூரியன் என பல வெரைட்டி உணவுகளை மஷ்ரூமில் செய்யலாம். அவ்வாறு மஷ்ரூம் எக் ஃப்ரை செய்வது எப்படி என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- மஷ்ரூம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
- முட்டை – இரண்டு
- எண்ணெய் – தேவையான அளவு
- கரிவேபில்லை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- பிரிஞ்சி இலை – ஒன்று
- உப்பு – தேவைகேற்ப
- இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
- மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
- மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
- பட்டை – ஒன்று
- லவங்கம் – ஒன்று
- ஏலக்காய் – ஒன்று
- வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
- தக்காளி – ஒன்று (நறுக்கியது)
- கரம் மசாலா – சிறிதளவு
செய்முறை
முட்டையை அடித்து அதில் கால் டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின்பு ஆவியில் இதனை வேகவைத்து, அதைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா,மிளகு தூள், உப்பு, சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்பு, மஷ்ரூம் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின், வெட்டிய முட்டை துண்டுகள் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான மஷ்ரூம் எக் ஃப்ரை தயார்.