தூக்கி எறியும் கறிவேப்பில்லை காம்பில் சூப் செய்வது எப்படி? அற்புத பலன்கள்
பொதுவாக சமையலில் கறுவேப்பிலையை அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் அதன் காம்பை தூக்கி குப்பையில் போட்டுவிடுவோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை.
இப்பதிவில் கறிவேப்பிலை காம்பில் சூப் எப்படி செய்வது அதனால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது - 15
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4
சிறிய வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
தக்காளி - 1 சிறியது
கரம் மசால் பொடி-1சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
தாளிக்க வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
சோம்பு/ சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு- 3
செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து,கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.
விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும். கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். இப்போது சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.