நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்?

Weight Loss Healthy Food Recipes Indigestion Diabetes
By Manchu Aug 01, 2024 03:15 AM GMT
Manchu

Manchu

Report

முருங்கை இலையின் நன்மைகள், எவ்வாறு இதில் சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முருங்கை

‘முருங்கை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்’ என்பது நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழமொழி.

இதன் அர்த்தம் என்னவெனில் முருங்கையின், கீரை, பூ, காய், என அனைத்தும் மருத்துவ மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், வயதான பின்பும் கம்பு இல்லாமல் வெறும் கையுடன் ஆரோக்கியமாக நடப்பார்கள் என்பதே அர்த்தம்.

முருங்கையில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி போன்றவை உள்ளன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். எலும்புகளை பலப்படுத்தும். கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

உடல் எடையைக் குறைப்பவர்கள், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என முருங்கை மூலமாக ஏராளமான பலன்கள் கிடைக்கின்றது.

முருங்கை கீரை பிரட்டல், கீரை சூப், முருங்கை பூ சேர்த்த பால், முருங்கை இளம்பிஞ்சு சேர்த்த பருப்பு, நெய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என்று உணவுகளில் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முருங்கை பிசினும் பயன்படுத்தப்படுகிறது.

என்னது தர்பூசணியில் 65 செய்றாங்களா? உணவுப் பிரியர்களின் அட்டகாசம்

என்னது தர்பூசணியில் 65 செய்றாங்களா? உணவுப் பிரியர்களின் அட்டகாசம்

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

பசியை கட்டுப்படுத்தும்

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், முருங்கை கீரையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் உடம்பிற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொடுக்கின்றது.

காளான் கொத்துகறி இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க

காளான் கொத்துகறி இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க

நீரிழிவு நோயாளிகளுக்கு தீரவு

மேலும் முருங்கை சாப்பிட்டால் இன்சுலின் அளவுகள் அதிகரிக்கும். அதனால் ரத்த சர்க்கரை குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

நார்ச்சத்து

முருங்கையில் கிடைக்கும் நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும், நமக்கான கலோரி தேவையை குறைப்பதுடன், மலச்சிக்கல் வராமல் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.

இந்தப் பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறுதலாக கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க

இந்தப் பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறுதலாக கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க

மெட்டபாலிச நடவடிக்கை

உணவை ஆற்றலாக மாற்றும் பொருட்டு நம் செல்களில் நடைபெறக் கூடிய வினைதான் மெட்டபாலிசம் ஆகும். எந்த அளவுக்கு மெட்டபாலிசம் கூடுதலாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உடம்பில் ஆற்றல் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

அமினோ அமிலங்கள்

பொதுவாக மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 முருங்கை கீரையில் கிடைக்கின்றது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

சத்தான சுவையான மொறு மொறு முருங்கை கீரை வடை இப்படி செய்தால் பிரமாதம்!

சத்தான சுவையான மொறு மொறு முருங்கை கீரை வடை இப்படி செய்தால் பிரமாதம்!

ஹீமோகுளோபின்

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும். 

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

முருங்கை சூப்

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 டம்ளர்  

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை கீரை சூப்... அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம்? | Murungai Keerai Soup Benefits In Tamil

செய்முறை

முருங்கைக் கீரையை நன்கு காம்புகள் நீக்கி உருவி எடுத்து, சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாய் ஒன்றில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது சூடானதும், அதில் முருங்கை இலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.

நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் என்ன?

நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் என்ன?

பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளராக வற்றிய பின்பு அடுப்பை அனைத்துவிட்டு சூப்பை பறிமாறலாம். காரம் தேவையெனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்தக் கொள்ளவும்.  

தலையில் பொடுகு தொல்லை அதிகமா இருக்கா? இதை கட்டாயம் பண்ணுங்க!

தலையில் பொடுகு தொல்லை அதிகமா இருக்கா? இதை கட்டாயம் பண்ணுங்க!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US