நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் என்ன?
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும் ‘இன்சுலின்’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில், கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இல்லை, அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும்.
இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன. நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன.இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில் ரீரிழிவு நோயாளிகள் எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நேரத்தில் சக்கரை நோய்க்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்து கொள்வது முக்கியம்.அதில் பல வகையான உணவுகள் இருக்கின்றன.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டு வந்தால் அது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.இது தினமும் இரண்டு எடுத்துக்கொண்டால் போதும்.
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.இதை ரத்த சர்க்கரை அதிகமாக உயராமல் தடுக்க உதவுகிறது.பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பாதாம் உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.இரத்த சக்கரை ளவை குநைக்கக்கூடிய ஒரு சிறந்த பழம் தான் இந்த வெண்ணெய் பழம்.வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன.
மேலும், இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது. அதிகமான கலோரிகளை கொண்டுள்ள பழமாகவும் இது உள்ளது. இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்து செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன.கொண்டைக்கடலையில் சுமார் 7 கிராம் புரதம் மற்றும் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாகதெரிகின்றது.
பாலடைகட்டி இதை விரும்பி உண்ணாதவர்கன் யாரும் இருக்க முடியாது.இது நீரைிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும்.இதில் 3 கிராம் புரதம் மற்றும் 4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள். சுவாரஸ்யமாக, பாலாடைக்கட்டி சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும்.