தலையில் பொடுகு தொல்லை அதிகமா இருக்கா? இதை கட்டாயம் பண்ணுங்க!
தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன.
இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கின்றன.இதை இப்படியெ கண்டுகொள்ளாமல் விட்டால் அது பூஞ்சையாக மாறி தீங்கை விளைவிக்கும்.
இதை தடுப்பதற்கு விட்டில் பல வழிகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா பெக். இதை எப்படி பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா
முதலில் ஒரு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி, ஷாம்பு செய்வதற்கு முன் குறைந்தது 20 நிமிடங்கள் விடவும்.
இதன் பின்னர் விரும்பிய ஷாம்பூ கொண்ட தலையை அலச வேண்டும்.இதை விரும்பாதவர்கள் தேங்காய் எண்எணய்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் நன்மை தரும்.இன்னுமுறையும்இருக்கிறது அது பேக்கிங் சோடா கொஞ்சம் எடுத்து முட்டையுடன் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி 20-25 நிமிடங்கள் ஷாம்பு செய்வதற்கு முன் வைக்கவும். பயனுள்ள முடிவுகளுக்கு இந்த தீர்வை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.இதை எல்லாம் விரம்பாதவர்கள் வேறு ஒரு முறையையும் கடைபிடிக்கலாம்.
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, அதில் இரண்டு ஸ்பூன் தேயிலை மர எண்ணெயை கலந்து அதோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு தேய்த்து குளிக்கவும்.
இப்படி செய்தால் தலையில் உள்ள அனைத்து பொடுகுத்தொல்லையும் இருக்காது.நீங்கள் பேக்கிங் சோடாவை மட்டும் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் தலையை நீரில் நன்கு அலசிய பின், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள pH பொடுகுகளை உண்டாக்கும் கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும். இதன்போது தலையை வெதுவெதுப்பான நீரினால் நன்கு அலச வேண்டும். குறிப்பாக ஷாம்பு, கண்டிஷனர் எதையும் பயன்படுத்தக் கூடாது.பேக்கிங் சோடா முடியை வலிமையாக்குவதோடு, முடியின் நிறத்தையும் பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |