கோடை காலத்தில் பழங்களை இப்படி சாப்பிடுறீங்களா? நஞ்சாக மாறும் எச்சரிக்கை
கோடை காலங்களில் பழங்களை வெட்டி வைத்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவது என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் பழங்கள் உட்கொள்வது உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. அதிலும் கோடை காலங்களில் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இந்த தருணங்களில் பழங்களை எடுத்துக் கொள்வதால் புத்துணர்ச்சியினை அளிப்பதாகவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பழங்களை வெட்டி சேமிக்கிறீர்களா?
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் நேரத்தினை மிச்சப்படுத்துவதாக நினைத்து, ஒரே நேரத்தில் பல பழங்களை ப்ரிட்ஜில் வெட்டி வைத்து விடுகின்றனர்.
பின்பு தேவையான தருணத்தில் அதனை எடுத்து சாப்பிடுகின்றனர். இவை சரியான செயல் என்று நாம் நினைத்திருக்கும் நிலையில், நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு செய்வது ஊட்டச்சத்து மதிப்பினை குறைப்பதுடன், நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வெட்டப்பட்ட பழங்கள் மீதுள்ள நொதிகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரியத் தொடங்கி ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றது.
உதாரணத்திற்கு வாழைப்பழம், ஆப்பிள் இவைகளை வெட்டி வைத்த பின்பு கருமையாக மாறுவதை நீங்கள் அவதானித்திருப்பபீர்கள்.

இவ்வாறு செய்வதால் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வேகமாக சிதைவடையத் தொடங்குகின்றன. வெட்டப்பட்ட பழங்களை நாம் எவ்வளவு நேரம் அதிகமாக வைத்து சாப்பிடுகின்றோமோ அந்த அளவிற்கு அதன் ஊட்டச்சத்தும் குறைகின்றது.
மேலும் பூஞ்சை, பாக்டீரியா இவைகள் கோடை காலத்தில் வெட்டி வைக்கப்பட்ட பழங்களில் செழித்து வளர்கின்றதாம். ஆகவே வெட்டப்பட்ட பழத்தினை உடனே சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருமணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில், பழங்களை வெட்டி வைத்தால் சால்மோனெல்லா மற்றும் ஈ கோலை போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தாக்க ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் பழம் நஞ்சாக மாறிவிடும். உடல்நல பிரச்னையையும் ஏற்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |