என்னது தர்பூசணியில் 65 செய்றாங்களா? உணவுப் பிரியர்களின் அட்டகாசம்
சிக்கன் 65, காலி ப்ளவர் 65, காளான் 65 என பல வகைகளில் 65 செய்யப்படும் நிலையில், தற்போது தர்பூசணியில் சிக்கன் 65 எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி
அதிகமான நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. வெயில் காலங்களில் உஷ்ணத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் இந்த பழத்தினை தான் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
அதாவது தர்பூசணி பழம் இல்லாமல் ஒவ்வொரு கோடை காலமும் நிறைபெறுவதில்லை என்பது சத்தியமான உண்மை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதும், உடலை எப்பொழுதும் நீர்ச்சத்து கொண்டதாக வைத்துக் கொள்ளும் இந்த பழத்தில் தற்போது 65-யும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
தர்பூசணி 65
யூடியூப் காணொளி ஒன்றில், சிக்கன் 65க்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைத்துக் கொண்டு, தர்பூசணி சிறிய கூம்பு வடிவில் வெட்டிக் கொள்கின்றனர்.
வெளிப்புறத்தில் சிறிய குச்சி ஒன்றினை குத்திக் கொண்டு, வெட்டப்பட்ட பழத்தில் மசாலாவை தடவிக் கொள்கின்றனர்.
பின்பு தர்பூசணியை முட்டை கலவையிலும், ரொட்டி தூளிலும் தடவி சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கின்றனர்.
இப்படி ஒரு வீடியோவை பார்த்தது பிரேம்ஜி ஸ்டைலில் என்ன கொடுமை சார் இது என்று சொல்லத்தான் தோன்றுகிறது. உணவு பழக்கம் மாறுவது என்பதெல்லாம் கால நிலை கேட்ப நடப்பது தான்.
ஆனால் இப்படி வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்ற பெயரில் முகத்தை சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில இணையவாசிகள்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |