உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகின்றதா? அப்போ இனி இந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்
ஒரு சிலருக்கு பொதுவாக கிழமைக்கு ஒரு தடவை சரி இந்த வாய்ப்புண் வந்து விடும். இது ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு போன்ற பகுதிகளில் சிறிய சிறிய கொப்பளங்கள் தோன்றும். இது நாளடைவில் கொஞ்சம் குழியாக பெரிதாகி வலியைக் கொடுக்கும்.
இந்த வாய்ப்புண் வந்தால் சாப்பிட முடியாது, காய்ச்சல், மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிக வலி என தொடர்ந்து காணப்படும். இந்தப் புண் பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிகம் வரும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இது அதிகமாக இருக்கும். மேலும், வெற்றிலை, புகையிலை, புகைப்பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் அடிக்கடி வாய்ப்புண் அதிகமாக வரும். இப்படி வாய்ப்புண் அடிக்கடி தொடர்ந்து வந்தால் சில உணவுகளை சாப்பிடவே கூடாதாம்
தவிர்க்க வேண்டியவை
- வாய்ப்புண் இருப்பவர்கள் காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது ஏனெனில் காரமான உணவுகளையும் சுடான உணவுகளையும் சாப்பிடும் போது வாய்ப்புண் எரிச்சலையும், அதிக வலியையும் கொடுக்கும்.
- வாய்ப்புண் உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களையும் காய்கறிகளையும் தவிர்ப்பது நல்லது ஏனெனில் அதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அது வாயில் இருக்கும் புண்களுக்கு அதிக எரிக்கலைக் கொடுக்கும்.
- கார்பனேற்றப்பட்ட பானங்களை வாய்ப்புண் இருப்பவர்கள் குடித்தால் அவர்களின் வாயில் இருக்கும் மென்மையான திசுக்கள் எரிச்சலடையும். அது மட்டுமில்லாமல் அதிக நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளின் வளர்ச்சிக்கும் உதவும்.
- டீ அல்லது காபி குடிக்கும் போது அது வாயில் இருக்கும் புண்களின் வீரியத்தைக் அதிகரிக்கும்.
- மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் வரும் மேலும் இது அதிக வலியையும் வீக்கத்தையும் கொடுக்கும்.
- சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவது வாய்ப்புண்களுக்கு நல்லது அல்ல அதனால் இலேசான உணவுகளை உட்கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |