ஒரே நாளில் வாய்ப்புண் சரியாக வேண்டுமா? ஈஸியான டிப்ஸ் இதோ
வாய்ப்புண் ஏற்பட்டால் வலியை பொறுத்து கொள்ளமுடியாததோடு எதையும் நிம்மதியாக சாப்பிட முடியாது.
வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். அதே போல அதிகம் நீர் அருந்தாவிட்டாலும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
வாய்ப்புண் ஒரே நாளில் குணமாக
அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள்.
வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும்.
கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவையாக புண் இருந்த இடத்தில் பூசி வந்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும் வாய் புண்ணும் குணமாகும்.
வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.