வாய்ப்புண்ணால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? சித்த மருத்துவம் கொடுக்கும் சிறந்த மருந்து!
ஒரு சிலருக்கு பொதுவாக கிழமைக்கு ஒரு தடவை சரி இந்த வாய்ப்புண் வந்து விடும். இது ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு போன்ற பகுதிகளில் சிறிய சிறிய கொப்பளங்கள் தோன்றும்.
இது நாளடைவில் கொஞ்சம் குழியாக பெரிதாகி வலியைக் கொடுக்கும். இந்த வாய்ப்புண் வந்தால் சாப்பிட முடியாது, காய்ச்சல், மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிக வலி என தொடர்ந்து காணப்படும்.
இந்தப் புண் பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இது அதிகமாக இருக்கும்.
மேலும், வெற்றிலை, புகையிலை, புகைப்பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் அடிக்கடி வாய்ப்புண் அதிகமாக வரும்.
சித்த மருத்துவம்
- திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
- நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் விட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும்.
- ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மி.கி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும்.
- வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும்.
தவிர்க்கவேண்டியவை
வாய்ப்புண் உள்ளவர்கள் காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும்.
இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரித்து வாய்ப்புண் வரும்.