வாய்ப்புண், பல் வலி சரியாக என்ன செய்யலாம்? எளிய மருத்துவ குறிப்புகள்
எதற்கெடுத்தாலும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட்டுவிட்டு மிக எளிய முறையில் நம் வீட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட பொருட்களை கொண்டே சரிசெய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
* தாய்ப்பால் அதிகம் சுரக்க காலை, மாலை என இரு வேளை பேரிக்காய் சாப்பிடுங்கள்.
* வெள்ளை வெங்காயத்தை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றிலும், குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும்.
* கத்தரிக்காயை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் சரியாகும்.
* முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
* கல்லீரலின் வீக்கத்தை குறைக்கும் தன்மை நிலவேம்பு கசாயத்திற்கு உண்டு.
* கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல்வலி, வாய்ப்புண் சரியாகும்.
* ஆப்பிளின் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
* செரிமானப் பிரச்சனைகளுக்கு வெந்தயக்களி தீர்வாகிறது.
* மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை புண், குடல் புண் சரியாகும்.