சப்பாத்தி மீந்து விட்டதா? கவலையே இல்லாமல் சுவையான காலை உணவு செய்யலாம்!
பொதுவாகவே வீட்டில் யாராவது சாப்பிடாமல் போனால் அந்த சாப்பாடு அப்படி மீந்து போய்விடும். அவ்வாறு மீந்து போன உணவுகளைக் கொண்டு புது புது சுவையான ரெசிபிகளை வீட்டில் செய்து சுவைக்கலாம்.
அந்தவகையில், இன்று மீந்து போன சப்பாத்தியில் சுவையான முட்டை கொத்து செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்
- 5 சப்பாத்தி
- 2 முட்டை
- 50 கிராம் சிவப்பு குடைமிளகாய்
- 50 கிராம் மஞ்சள் குடைமிளகாய்
- 50 கிராம் பச்சை குடைமிளகாய்
- 25 கிராம் முட்டைகோஸ்
- 2 பச்சை மிளகாய்
- 50 கிராம் கேரட்
- 1 பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- சிறியதுண்டு இஞ்சி 1கரண்டி
- மிளகாய் தூள் 1 கரண்டி
- மல்லி தூள் 1/2 கரண்டி
- கரம் மசாலா 1/2 கரண்டி
- சில்லி சாஸ் 1/2 கரண்டி
- சோயா சாஸ் 1/2 கரண்டி
- உப்பு, மிளகு தூள் தேவையான அளவு
செய்முறை
முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
பிறகு வதங்கியதும் அதில் முட்டைக்கோஸ், கேரட், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, வறுத்து முட்டை சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி மல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கினால் சுவையான காலை உணவு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |