ருசியான சீஸ் ஒம்லேட் செய்து பாருங்கள்...
வீட்டில் பிடிக்காத குழம்பு வைத்திருந்தால், உடனடியாக நமது மனம் செய்ய எண்ணுவது ஆம்லேட் தான்.
வழமையாக வெறும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு செய்வதை விட, வீட்டில் கொஞ்சம் காய்கறிகள் மற்றும் சீஸ் இருந்தால், இவ்வாறு சீஸ் ஆம்லேட் செய்து பாருங்களேன்...
தேவையான பொருட்கள்
சீஸ் - சிறிய துண்டு
முட்டை - 3
முட்டைக்கோஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சீஸை துருவிக் கொண்டு, முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கிக்கொண்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையில் காய்கறிகளை கலந்து வைத்துக் கொள்ளவும்.
இறுதியாக தோசைக்கல் சூடானதும் அதில் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, அதன் மேலே துருவிய சீஸை பரவலாகத் தூவி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும். தற்போது சுவையான சீஸ் ஆம்லேட் ரெடி
சூப்பரான சீஸ் ஒம்லேட் ரெடி!