சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சுவையான காளான் ஊத்தப்பம்- செய்வது எப்படி?
சர்க்கரை வியாதி என்பது மிக மோசமாக இன்று அனைவருக்கும் வருகிறது. உடல் எடையைக் கூறுவது போல, சர்க்கரையின் அளவைக் குறிப்பிட்டு பேசிக்கொள்கின்றனர்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது? என உணவே மருந்து ஆன காளான் ஊத்தப்பம் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- தோசை மாவு - 2 கப்
- வெங்காயம் நறுக்கியது - 2
- நறுக்கிய குடைமிளகாய் -1
- பச்சை மிளகாய் நறுக்கியது - 1
- கருவேப்பிலை நறுக்கியது - 1 கைப்பிடி
- காளான் நறுக்கியது - 1 கப்
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவவும்.
மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு 1 நிமிடம் சுட்டு சுவையாக சூடாக பரிமாறவும்.