மீந்து போன சப்பாத்தியில் சூப்பரான சுவையான ரெசிபி செய்யலாம்: கப் பீட்சா எப்படி செய்வது தெரியுமா?
பொதுவாகவே வீட்டில் யாரவது சாப்பிடாமல் போனால் அந்த சாப்பாடு அப்படி மீந்து போய்விடும்.
அவ்வாறு மீந்து போன உணவுகளைக் கொண்டு புது புது சுவையான ரெசிபிகளை வீட்டில் செய்து சுவைக்கலாம்.
அந்தவகையில், இன்று மீந்து போன சப்பாத்தியில் கப் பீட்சா செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் பீட்சா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சப்பாத்தி - 4
- எண்ணெய் - 2 கப்
- மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்
- சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்
- பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்
- ஆரிகானோ - 2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
- ஆலிவ் பழம் - 5
- குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
-
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள்.
சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம். கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும்.
அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஆரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.