காணாமல் போன மொடல் அழகி! ஃபிரிட்ஜில் இருந்த கால்கள்: அதிர்ச்சியில் பொலிசார்
மாடல் அழகி ஒருவரின் உடல் பாகங்கள் ஃபிரிட்ஜில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதற்கு காரணத்தினை கேட்ட பொலிசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மாடல் அழகி
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி அபி சோய். இவர் உலக அளவில் புகழ்பெற்றவர்.
இவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார்.
இவருக்கு திருமணமாகி ஒருமகன் மற்றும் மகள் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் திடீரென காணாமல் போனதாக பொலிசாரிடம் புகார் வந்ததையடுத்து, பல இடங்களில் தேடியும் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு தாய்போ என்னும் மாவட்டத்தில் அபி சோயின் உடல் பாகங்கள் கிடப்பது பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அபி சோயின் கால்கள் துண்டாக வெட்டப்பட்டு ப்ரிட்ஜில் இருந்த சூழ்நிலையில், அவரது மற்ற உடல் பாகங்களை பொலிசார் தேடியுள்ளனர்.
பொலிசாரின் தீவிர விசாரணையில் அலெக்ஸ் தான் குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அபி சோயின் கணவர் வேறொரு தீவிற்கு தப்ப முயற்சித்த நிலையில், பொலிசார் அவரையும், அவருடன் இருந்த சில நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடம்பர ரக வாட்சுகளையும் அபி சோயின் கணவரிடம் இருந்து பொலிசார் கைப்பற்றி உள்ளதாகவும், சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் தரப்பில் கூறப்படுகின்றது.