ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முட்டைகள்: எங்கு தெரியுமா?
கனடாவின் பசிபிக் கடற்பகுதியிலுள்ள ஆழக்கடலில் வாழும் உயிரினம் ஒன்றின் மில்லியன் கணக்கான ஒளிரும் தங்க முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்க முட்டைகள் கண்டுபிடிப்பு
இந்த தங்க முட்டைகள் எரிமலைக்கு அருகில் உள்ள கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலையான ஒரு காலத்தில் செயலற்றதாகவும், உயிர்கள் வாழ முடியாத அளவுக்குக் குளிராக இருந்துள்ளது. கடல் உயிரியலாளர் ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று இந்த மின்னும் தங்க முட்டைகள் தொடர்பான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
அதாவது, பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் முட்டைகள் என நம்பப்படுகிறது. சுறாக்கள் மற்றும் கதிர்களுடன் தொடர்புடைய ஒரு ஆழக்கடல் இனமாக இருக்கும் இந்த வகை மீன்கள் கடலின் அடிப்பகுதியில் உள்ள நீர் வெப்ப துவாரங்களுக்கு அருகில் கொத்தாக ஒளிரும் முட்டைகளை இட்டுள்ளன.
இந்த துவாரங்கள் புவி வெப்பத்தை வெளியிடும். ஆழக்கடலின் உறைபனிப் பகுதியில் வியக்கத்தக்க வகையில் இருக்கும் இந்த முட்டைகள் இருப்பதற்கான சாதகமான சூழல் உருவாக்கம் பெறுகிறது.
ஆழ்கடலில் உள்ள குளிர்ச்சியான, இருட்டான சூழல் மற்றும் எரிமலையின் வெப்பம் ஸ்கேட் மீன்கள் தங்கள் முட்டைகளை அடைக்காக்க உதவியாக இருக்கிறது.
எவ்வளவு காலம் அடைக்காக்கும்?
பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் வாழ்க்கைச் சுழற்சி மற்ற விலங்குகளை விட வித்தியாசமானதாக இருக்கும். இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை எடுக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
எரிமலை துவாரங்களிலிருந்து வரும் வெப்பம், கரு வளர்ச்சிக்கு முக்கியமான ஆற்றலை வழங்குவதன் மூலம் இந்த செயன்முறை துரிதப்படுத்தப்படுகிறது.
கடந்த 2019ல் இந்த ஒளிரும் தங்க முட்டைகள் தொடர்பான கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2023ல் விஞ்ஞானிகள் தரப்பு அதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |