மறந்தும்கூட இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பானம் என்றால் அது பால் தான், பாலில் கால்சியம், விட்டமின் டி, புரதம் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
எலும்புகள், பற்கள் வலுப்பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புரதத்தின் ஆதாரமாகவும் பால் விளங்குகிறது.
ஆனால் சில பொருட்களை பாலுடனோ, பால் அருந்திய பின்னரோ அல்லது முன்னரோ எடுத்துக்கொள்வது உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம்.
தயிர்
பாலுடன் சேர்த்தோ அல்லது பால் அருந்திய பின்னரோ தயிர் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என ஆயுர்வேதம் கூறுகிறது, இது வயிற்று தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிட்ரஸ் பழங்கள்
பாலுடன் சேர்த்து சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது, இதை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி அல்லது அஜீரணக்கோளாறு ஏற்படும். சிட்ரஸ் பழங்கள் எடுத்துக்கொண்ட 2 மணிநேரம் கழித்து பால் சாப்பிடவும்.
வாழைப்பழம்
பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு, ஆனால் அஜீரணம் உள்ள போது இவை ஒன்றையும் சேர்த்து சாப்பிடுவது பிரச்சனையை தீவிரப்படுத்தலாம், இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் ஆவதற்கான நேரமும் அதிகரிக்கும்.
இறைச்சி அல்லது முட்டை
இறைச்சி அல்லது முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளுடன் பாலை எடுத்துக்கொள்வது செரிமான அமைப்பில் சிக்கல்களை உண்டாக்கலாம்.
காரமான உணவுகள்
அதிக காரம் நிறைந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, இதனால் பாலில் உள்ள புரதம் செரிமானம் ஆகாமல், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதேபோன்று உப்பு நிறைந்த தின்பண்டங்களையும் பாலுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது.
மீன்
மீன் உணவுகளை பாலுடன் சாப்பிடக்கூடாது. குளிர்ச்சியான பாலுடன் சூடான மீனை சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் நல்லதல்ல என கூறப்பட்டுள்ளது, இதனால் உணவு ஒவ்வாமை, வயிற்று வலி மற்றும் தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
