AI வளர்ச்சியால் எதிர்காலத்தில் இந்த 3 வேலைகள் இருக்காதாம் - என்ன வேலை தெரியுமா?
OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மேன் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போதைய தொழில்துறையை கடுமையாக சவாலாக மாறியுள்ளது.
OpenAI வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையின் பலதுறைகளிலும் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மேன் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போதைய தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் என தெரியவந்துள்ளது.
மருத்துவத்துறை
சுகாதாரத்துறையிலும் ஏஐ முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது. ChatGPT போன்ற ஏஐ கருவிகள், சில நேரங்களில் மனித மருத்துவர்களைவிட சிறந்த நோயறிதல் செய்யக்கூடிய திறனைக் கொண்டுள்ளன என அல்ட்மேன் தெரிவித்தார்.
எனினும், “என் சொந்த சுகாதார பராமரிப்புக்காக, மனிதர் இல்லாமல் ஏஐ மேல் முழுமையாக நம்ப முடியாது” என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
ஓபன்ஏஐ திட்டங்கள் மற்றும் வளர்ச்சி
OpenAI நிறுவனம் தற்போது வாஷிங்டனில் தனது நிலையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய அலுவலகங்கள், அதற்கேற்ப “ஏஐ செயல் திட்டம்” எனப்படும் திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஏஐ வளர்ச்சிக்கு ஆதரவாக முந்தைய கட்டுப்பாடுகளிலிருந்து விலகிய புதிய முன்னேற்றக் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.
ஏஐ தொழில்நுட்பம் இன்று உலகை வடிவமைக்கும் மிக முக்கியமான சக்தியாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் மற்றும் மனித சமூகத்தின் நலனுக்கான வழிகாட்டுதல்களும் அவசியம் என சாம் அல்ட்மேன் வலியுறுத்துகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |