பாம்பு தன் தோலை உரிப்பது ஏன் தெரியுமா?
ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகளை பார்த்தால் படையே நடுங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதே இனத்தை சேர்ந்த பல்லி, ஆமை மற்றும் மரப்பல்லிகள் போன்ற பிராணிகளும் தன்னுடைய தோலை உரிக்கக்கூடியவையே, ஆனால் அவை சிறு துண்டுகளாகவோ, செதில்களாகவோ இருக்கும்.
பாம்பு மட்டும் தன்னுடைய முழுத் தோலையும் உரித்துவிடுகிறது, இது ஏன் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வயது மற்றும் பாம்பின் வகைக்கு ஏற்ப தோலை உரிப்பது வேறுபடும், இளம் பாம்புகள் வளர்ந்த பாம்பை விட அதிக முறை தோலை உரிக்கின்றன.
தோல் வளரும் போது விரிவடைவதில்லை, இதன் பழைய தோலுக்கு அடியில் புதிய தோல் வளர்கிறது.
முழுமையாக வளர்ந்த பின்னர் அசௌகரியமாக உணரும் போது அதன் தோலை உரிக்கிறது.
ஒரு சொரசொரப்பான இடத்தில் பாம்பு தன்னுடைய தலையை தேய்க்கும் போது தோலில் விரிசல் உண்டாகிறது, அப்படியே பழைய தோலையையும் உரித்து விடுகிறது.
அதுமட்டுமல்லாது பழைய தோலின்மேல் பக்டீரியாக்களும் ஒட்டுண்ணிகளும் இருக்கலாம், இவற்றில் இருந்து விடுபடவும் தோலை உரித்து புதுத்தோலுடன் காட்சி தருகிறது.
பழைய தோலில் இருந்து புதிய தோலுக்கு மாறும் போது பாம்பு இருட்டான இடத்தையே தேர்வு செய்யுமாம், இதற்கு காரணம் அசௌகரியமாக உணர்வதே என கூறப்படுகிறது.
அந்நேரத்தில் யாராவது தொந்தரவு செய்தால் பாம்பு தாக்கலாம் எனவும் வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |