18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தரித்திர யோகம்- ஆபத்தில் இருக்கும் 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவார்.
இவ்வாறு சூரியன் தன்னுடைய ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்களுக்கும் இருக்கும். இதன்படி, தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணிப்பார். சொந்த ராசிக்கு சூரியன் செல்வது சற்று சிறப்பான தகவல் என்றாலும் சிம்ம ராசியில் ஏற்கனவே கொடூரமான கிரகமாக கருதப்படும் கேது பயணித்து வருகிறார்.
இதனால் சூரிய பெயர்ச்சி நடக்கும் பொழுது சிம்ம ராசியில் கேது சூரிய சேர்க்கை நடக்கும். இதன் விளைவாக கெட்டதை அதிகமாக கொடுக்கும் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. அதுவும் 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. யோகங்களில் தரித்திர யோகமானது மிக மோசமான விளைவுகளை ராசிகளுக்கு கொடுக்கும்.
அந்த வகையில் சூரியன்- கேது சேர்க்கையால் உருவாகும் தரித்திர யோகத்தால் ஆபத்தில் சிக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசியில் 5 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். இதயம் தொடர்பான பிரச்சினையுள்ளவர்கள் வழக்கத்தை விட பிரச்சினைகள் அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணியாக இருப்பவர்கள் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். தரித்திர யோகத்தின் விளைவுகளைத் தவிர்க்க, கேதுவின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். |
ரிஷபம் | ரிஷப ராசியில் 4 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சில சிக்கல் வரலாம். வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். இந்த ராசியினரின் தாயாரின் ஆரோக்கியம் கவலை இருக்கும். பிரச்சினைகள் வரும் பொழுது மன அழுத்தம் ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. |
சிம்மம் | சிம்ம ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம். எந்த வேலை செய்தாலும் அதிகம் கவனம் தேவை. மோசமான விளைவுகள் வரவும் வாய்ப்பு உள்ளது. தவிர்க்காமல் கேதுவின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).