மகன் இல்லாத குறையை தீர்க்க இறுதிச்சடங்கில் மீனா செய்த காரியம்! சோகத்தில் ரசிகர்கள்
நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகர், நேற்று முன்தினம் இரவு காலமான நிலையில், நேற்று இறுதிச்சடங்கில் கணவரின் உடலுக்கு மீனா கடைசியாக கண்ணீர் மல்க முத்தம் கொடுத்தது, அங்கிருந்த பலரையும் கண் கலங்க வைத்தது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். நைனிகா தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதனிடையே 48 வயதே ஆன வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கணவருக்கு மகனாக மாறிய மீனா
பின்னர் நேற்று பிற்பகல் வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வித்யாசாகரின் உடல் அமரர் ஊதியில் ஊர்வலமாக சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, அங்கு மீனாவும், அவரது மகளும் வித்யாசாகரின் உடலுக்கு இறுதி சடங்கு செலுத்தினர். தனது, கணவரின் முகத்தை கடைசியாக பார்த்த மீனா, கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு விடை கொடுத்து அனுப்பிவைத்தார்.
மேலும், தங்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் நடிகை மீனாவே தனது கணவருக்கு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டும் தோளில் துண்டால் போர்த்திக் கொண்டும் இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார். இது பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்தது.