கையில் செம்புடன் கணவருக்கு இறுதி காரியம்! மீனா வித்யாசாகரை வேண்டாம் என்று கூறியது தெரியுமா?
தன் பெற்றோர் பார்த்த பையனான வித்யாசாகரை முதலில் வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார் மீனா.
நடிகை மீனா
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. கணவரை இழந்து தவிக்கும் மீனாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள். மீனாவின் திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தி வைத்தது.
வித்யாசாகரை வேண்டாம் என கூறிய மீனா
தனது திருமணம் குறித்து மீனா சமீபத்தில் கூறுகையில், ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவரை பார்க்க, பேச எனக்கு சவுகரியமாக இல்லை.
மே மாதம் பேசத் துவங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்தார்கள். பார்த்த ஆளு இது ஓகே, ஆனால் இதை விட நல்லது வருமே, அமையுமே என்றார்.
அதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாடி வேண்டாம் என்றேன். அவரிடம் குட்பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பை சொல்லியாச்சு.
அதன் பிறகு என் ஆன்ட்டி வந்து என்னது இது, ஒருத்தர் சொன்னால் உடனே வேண்டாம் என்று கூறிவிடுவதா என்றார். அப்படித் தான் மீண்டும் பேசி திருமணம் நடந்தது என்றார்.
மேலும் சண்டை நடந்தால் அதை முதலில் மறந்து பேசுவது சாகர் தான் என்றும், தான் பல நாட்கள் இழுத்தடிக்கும் ஆள் என்றும் கூறினார் மீனா.
மீனாவின் கெரியருக்கு ஆதரவாக இருந்து வந்தார் சாகர். மேலும் மனைவியின் சாதனைகளை தன் சாதனைகளாக கொண்டாடியவர், பெருமைப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.