ஆண்கள் யாரும் இல்லை...கையில் கணவரின் அஸ்தி வைத்து கொண்டு நிலைகுலைந்து போன மீனா!
நடிகை மீனா கணவரின் அஸ்தியுடன் கதறி அழுதபடி வீடு திரும்பி உள்ளார்.
நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் வந்து மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் வந்து துக்கம் விசாரித்தனர்.
வித்யாசாகரின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மீனாவின் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால், மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்தனர்.
அவர்களின் குடும்ப முறைப்படி வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தியை கையில் எடுத்துக்கொண்டு வந்து இறுதி கிரையைகளை முடித்துள்ளார்.
இளம் வயதில் கணவர் இல்லாமல் நிலைகுலைந்து போயிருந்தார் மீனாவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.