Tamizha Tamizha: உங்களுக்கு அசிங்கமா இல்லையா? மனைவி முன்பு கணவரை வெளுத்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் பெண் வீட்டில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்காமல் உடையணிந்து வருவதாக ஏற்பட்ட மனஸ்தாபம் கடைசியில் அவரை அடிக்கும் வரையும் சென்றுள்ளது. இதனால் விவாகரத்து மனநிலைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
மற்றொரு பெண் கணவர் ஏற்பட்ட கடனுக்கு தான் காரணம் என தன்னை சத்தம் போடுவதாக கூறியுள்ளார். மற்றொரு பெண் கூறிய காரணத்தைக் கேட்ட தொகுப்பாளர் கணவரைப் பார்த்து உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என்று கேட்டுள்ளார்.
ஜாதி மாற்றி திருமணம் செய்து கொண்ட இருவரையும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாம். பின்பு குழந்தை பிறந்த பின்பு ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் கணவர் வீட்டில் மருமகளை முதல்நாளில் வெளியே படுக்க வைத்துள்ளனர். இதனைக் கேட்ட தொகுப்பாளர் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |