மாலை நேரத்தில் டீயுடன் சுடச்சுட மசால் வடை: வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்
மாலை வேளைகளில் வீட்டில் உள்ளவர்களுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
புதிய புதிய ரெசிபிகளை செய்து அசத்து பெண்களுக்காகவே மிகவும் இலகுவான முறையில் வீட்டிலேயே மசால் வடை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு- 1 கப்
சோம்பு- 1 தேக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு- 2
சிவப்பு மிளகாய்- 4
உப்பு -1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 1 (நறுக்கியது)
பூண்டு – 3
இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
கடலைப்பருப்பில் தனியாக ஒரு கப் எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள கடலைப்பருப்பில் கிராம்பு, சிவப்பு மிளகாய், உப்பு, பட்டை, சோம்பு என்பவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துக் கொண்ட கலவையில் எடுத்து வைத்த கடலைப்பருப்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி என்பவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவேண்டும்.
இப்போது அந்தக் கலவையில் வடையை தட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் மசால் வடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |