மாலை நேர சூடான தேநீர்க்கு Potato Fingers! இதோ
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் சில வீடுகளில் உள்ள தாய்மார்கள் சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.
மேலும் குழந்தைகளுக்கு அதிகமாக ஸ்நாக்ஸ் வகைகள் கொடுப்பதால் அவர்களுக்கு அதிக எடைப்போடும் என சிலர் கூறுவார்கள். அந்தவகையில் நாம் செய்யும் ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் அததுடன் சுவையானதாகவும் இருக்க வேண்டும்.
இதன்படி, மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காம்பினேஷன் பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் இந்த ஸ்நாக்ஸ் எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 4
ரவை -1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்புமுறை என்ன தெரியுமா?
முதல் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகிய காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்நாக்ஸ் என்பதால் சாப்பிடும் போது வாயில் அகப்படக் கூடாது.
பின்னர் ஒரு பவுலை எடுத்து அதில் இரண்டு கப் அளவில் தண்ணீர் ஊற்றி, அதற்கு தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக நீரை கொதிக்க விட வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் சளித்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறி முடிக்கும் போது ஒரு கட்டி அகப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது போல் சுமார் 10 நிமிடங்களுக்கு செய்து விட்டு இறக்கி விட வேண்டும். இது ஒருப்புறம் இருக்கையில் உருளைக்கிழங்கை நன்றாக அவித்து தோல் நீக்கி மசித்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் அடுப்பிலிருந்து இறக்கிய ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு என்பவற்றை சேர்த்து ஒரு கலவையாக சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த பின்னர் விரல்கள் போன்று உருட்டி உருட்டி எடுத்து, அடுப்பில் சூடான எண்ணெயில் இருக்கும் எண்ணெய் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்த்த சூப்பரான ஸ்நாக்ஸ் தயார்!