6 மாதங்களே ஆனாலும் இஞ்சு பூண்டு விழுது கெடாமல் இருக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ்
அனைவரது வீட்டின் ஃப்ரிட்ஜிலும் இது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது என்னவென்று இன்னும் கண்டு பிடிக்க வில்லையா? அதுதான் இஞ்சி, பூண்டு விழுது. இதனை எப்படி பல மாதங்கள் கெட்டுப் போகாமல் அரைத்து வைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
இஞ்சி, பூண்டு விழுதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. எனவே இந்த இஞ்சி, பூண்டு விழுது எப்பொழுதும் நமது வீடுகளில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதினை அரைப்பதற்கு எப்போது 60% பூண்டையும் 40% இஞ்சியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை கட்டாயம் தோலுரித்த பின்னரே அரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். தோலுரித்த இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக கழுவிக் கொண்டு அதனை ஒரு காகிதம் அல்லது துண்டில் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இஞ்சி, பூண்டை அரைக்க பயன்படுத்தும் மிக்ஸி ஜாரினையும் ஈரம் இல்லாமல் ஒரு துண்டினை வைத்து துடைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஈரம் இல்லாமல் இருந்தால் தான் இஞ்சி, பூண்டு விழுது பல மாதங்களுக்கு வீணாகாமல் இருக்கும். இஞ்சி, பூண்டினை மிக்ஸி ஜாரில் சேர்த்து அவை நன்றாக அரைபடுவதற்கு 5 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும்.
இவற்றுடன் நல்லெண்ணெயை சேர்த்து அரைக்கும் பொழுது நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும். நிச்சயம் இதனுடன் தண்ணீர் மட்டும் சேர்த்து அரைத்து விடக்கூடாது. மேலும், இஞ்சி, பூண்டுடன் ஒன்றரை ஸ்பூன் கல் உப்பினை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
வேறு எந்த அயோடின் உப்புகளையும் சேர்த்து கொள்ள கூடாது. கல் உப்பினை வறுத்து அதன்பின் அரைத்து வைத்திருக்கும் தூள் உப்பாக இருந்தால் அதனை சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, கடாய் காய்ந்ததும் அடுப்பின் தீயை குறைத்துக் கொண்டு அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து நன்றாக சூடேறும் வரை 5 அல்லது 7 நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.
அடுப்பை அனைத்து விட்டு, சூடு செய்த இஞ்சி, பூண்டு விழுதினை ஒரு கண்ணாடி டப்பாவில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் ஆறு மாதங்கள் ஆனாலும் நீங்கள் எப்படி அரைத்து வைத்தீர்களோ அதே நிறத்திலும் அதே சுவையிலும் அப்படியே இருக்கும்.